சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவுமுதல் குறைப்பு!
Friday, June 29th, 2018
சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் 138 ரூபாவால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை வாழ்க்கைச் செலவினக் குழு மேற்கொண்டுள்ளது.
சர்வதேச சந்தையில் அமுலில் உள்ள விலைக்கமைய உள்ளூர் சந்தையிலும் சமையல் எரிவாயுவின் விலை நிர்ணயிக்கப்பட இருக்கின்றது.
இதற்கு அமைவாகவே சமையல் எரிவாயுவின் விலையைக் குறைக்க வாழ்க்கை செலவினக் குழு தீர்மானித்ததாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பணிப்பாளர் இந்திக்கா ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் 138 ரூபாவால் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாகக்கூறி நிதி மோசடியில் ஈடுபடுவோரிடம் சிக்க வேண்டாம் - வெளிநாட்டு வேலைவ...
ரணிலுக்காக மக்களை விரட்டி விரட்டி பிடித்த விஜயகலாவும் ஆர்னோல்ட்டும் – அதிர்ப்தியில் உத்தியோகத்தர்கள...
உக்ரைன் நெருக்கடியால் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள இலங்கை தயார் - வெளிவிவகா...
|
|
|


