தவணை பரீட்சைகள் அடுத்த மாதம் ஆரம்பம்!

Friday, June 29th, 2018

வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சைகள் அடுத்த மாதம் ஆரம்பமாகும் என்று மாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சைகள் ஜீலை மாதம் 18 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிறைவடையும்.

தரம் 6 தொடக்கம் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பரீட்சையே முதலில் ஆரம்பமாகவுள்ளன.

தரம் 9 தொடக்கம் 11 ஆம் வகுப்புக்கான விஞ்ஞான செயன்முறைப் பரீட்சைகள் ஜீலை 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. தரம் 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அழகியல் செயல்முறைப் பரீட்சைகள் ஜீலை 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

அனைத்துப் பரீட்சைகளும் 8 மணிக்கு ஆரம்பமாகும். பாடங்களுக்கு ஏற்ப பரீட்சை நேரங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் அதிகரிப்பு - பொதுமக்கள் அவதானமாக செயற்பட ...
நாளைமுதல் நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம் - புகையிரதத் திணைக்களம் அறிவிப்...
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தோழர் ஈசனின் தாயாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் க...

கந்தர்மடம் பகுதி வறிய மக்களுக்கு சுயதொழில் உதவிக்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உதவி பொருட்கள் வழங்...
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து, நாட்டின் அரச - தனியார் பங்குடமை நிறுவனங்கள் சிலவும் மர...
மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும் என போதிக்கும் மத்திய வங்கி தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளது -மன்னிப...