தேங்கி கிடக்கும் கடிதங்கள் ஒரு நாளைக்குள் விநியோகிக்கப்படும்!
Friday, June 29th, 2018
அஞ்சல் சேவையாளர்கள் பல நாட்களாக மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பினால் தேங்கி கிடக்கும் கடிதங்களை ஒரு நாளைக்குள் விநியோகித்து முடிக்கப்படும் என ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளதாக அதன் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கி கிடக்கும் வெளிநாட்டுக் கடிதங்கள் மற்றும் பொருட்களை விநியோகிக்க விசேட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவையாளர்கள் கடந்த 16 நாட்களாக முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நேற்று முன்தினத்துடன் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
Related posts:
சிறந்த தலைமைத்துவம் இன்மையே நாட்டின் தளம்பலுக்குக் காரணம் - மத்திய வங்கி முன்னாள் ஆளுநர்!
729 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் இன்று அழிப்பு!
கருங்கல், மணல், மண், சரளை மற்றும் களிமண் அகழ்வு, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தொடர்பான உரிமங்களை வ...
|
|
|


