ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட காரியாலய திறப்பு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!
Sunday, June 17th, 2018
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட காரியாலய திறப்பு விழாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்துள்ளார்.
வவுனியா வெளிக்குளம் பகுதியில் குறித்த அலுவலகம் இன்றையதினம் (17) சம்பிரதாயபூர்வமாக திறந்தவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய அமைப்பாளர் இராஜதுரை, முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனாதிபதி விஷேட அமைப்பாளருமான பிரபாகணேசன், மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் என ஏராளமான அரசியல் பிரமுகர்களும் பொது மக்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கின் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விஷேட திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி ...
உண்மையைச் சொன்னால் போலிகளுக்கு கசக்கிறது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்
வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டவர்களுக்கு இன்றல்ல முன்பிருந்தே ஆதரவு வழங்கியுள்ளேன் - தமிழ் வேட்பாளர...
|
|
|









