இன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயம்!
Monday, June 18th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
நாட்டின் உயிர்நாடிகளான சிறுவர்களைப் பாதுகாத்து, அவர்களது உடல், உள விருத்திக்கு ஏற்ப சமூகத்தில் அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறந்த சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
துஷ்பிரயோகங்களைத் தடுத்தல், பாதுகாப்பை உறுதி செய்தல், சுகாதார போசணை, ஆளுமை விருத்தி, கல்வி மற்றும் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தல் ஆகிய துறைகளினூடாக நாடளாவிய ரீதியில் இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
Related posts:
புதிய வாகன சட்டங்கள்: காப்புறுதி பெறுவதில் சிக்கல்!
மாத்தளை சம்பவம் - கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
டெங்கு தொற்றுப் பரவுவதற்கு ஏதுவான சூழலைக் கொண்டுள்ள இடங்கள் தொடர்பில் பாரபட்சமின்றி வழக்கு - அனைத்த...
|
|
|


