புதையல் தோண்டும் கருவியுடன் சென்ற நால்வர் கைது!
Saturday, June 16th, 2018
ஏ-9 வீதியில் சென்ற அதி சொகுசு கார் ஒன்றினை வவுனியாவில் அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து அதில் பயணித்த நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து நிலத்தடியில் புதையலை கண்டுபிடிக்கும் ஸ்கானர் ஒன்றையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை கைது செய்யப்பட்ட நால்வரையும் அதி சொகுசு காரையும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் தேசிய விளையாட்டு விழா!
இன்று நள்ளிரவுமுதல் நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு !
வெளிநாட்டு விமானங்கள் உள்நாட்டு சேவையிலும் ஈடுபடும் - அனுமதி கொடுத்தது இலங்கை!
|
|
|


