யாழ்ப்பாண மாவட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு 35 மில்லியன் ஒதுக்கீடு!

Sunday, June 17th, 2018

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்துக்குட்பட்ட இரண்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 35.42 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அமுலாக்கத்தின் கீழ் வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவு ஜே-007 கிராம அலுவலர் பிரிவில் மண்டைதீவு சுற்றுச்சூழல் சுற்றுலா மையத்தில் கம்பியிலான கல் அணை 29.97 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது.

அத்துடன் மாவட்ட செயலக அமுலாக்கத்தில் உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே-200 கந்தரோடை கிராம அலுவலர் பிரிவில் கந்தரோடைக் குளத்தை அண்டிய பகுதியைச் சுற்றுலா மையமாக்குவதற்கு 5.45 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts:

ஆசிரியரைத் தாக்கி அவரது மோட்டார் சைக்கிள் அபகரிப்பு  - கே.கே.எஸ் வீதியில் நேற்றுப் சம்பவம்!
நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிலை இழக்கச் செய்யாமல் பேணுவதற்கு நடவடிக்கை முன்னெடுப்பு – ...
தமிழ் தேசியம் என்று கூறி அம்மணமாக நின்று அரசியல் செய்வோருக்கு சமஸ்டி தொடர்பில் வகுப்பெடுத்த முன்னாள்...