தெற்கை அச்சுறுத்திய வைரஸ் கட்டுப்பாட்டில்!
Tuesday, June 12th, 2018
தென் மாகாணத்தில் பரவிய வைரஸ் காய்ச்சல் 75 சதவீதம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டம் சிறப்பாக அமுலாகியது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பரவிய வைரஸ் காய்ச்சலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் டொக்டர் விஜயசூரிய குறிப்பிட்டார்.
பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பிவைத்து இயல்பு வாழ்க்கையில் ஈடுபடக்கூடிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. எனவே, வைரஸ் நோய் குறித்து அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்றும் தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார்.
Related posts:
தடுப்பூசி வழங்கலில் பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு முன்னுரிமை வேண்டும் - வடமாகாண ஜனநாயக போக்குவரத...
விஷம் கலந்த தேங்காய் எண்ணெய் விவகாரம் - வடக்கின் வர்த்தக நிலையங்கள் - சேமிப்பு கிடங்குகளில் அதிரடிச்...
பழங்கால கட்டடங்களின் தொன்மையை பாதுகாக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை - அமைச்சர் பிரச...
|
|
|


