நுண்கடன் தொல்லை: மேலும் ஒரு தற்கொலை!

Tuesday, June 12th, 2018

நுண்கடன் தொல்லையினால் மட்டக்களப்பு – மாவடிவேம்பு பிரதேசத்தில் மற்றுமொரு இளம் குடும்பஸ்தர் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாவடிவேம்பு சம்பந்தர் வீதியைச் சேர்ந்த 25 வயதான மேகராசா யோகராசா என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு மரணமடைந்தவரென ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் நான்கு நிறுவனங்களில் ஏக காலத்தில் நுண்கடன்களைப் பெற்று முன்னெடுத்த தொழிலில் நட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தவணைப் பணத்தைச் செலுத்த முடியாது போனது. இந்நிலையில் மற்றுமொரு நிறுவனத்தில் கடனைப் பெற முயற்சித்த வேளை தனது மனைவியுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Related posts:

206 ஆவதாக இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியால் முழு நாடுக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது – எச்சரிக்கை விடுக...
பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார செயலாளருடன் இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சந்த...
இலங்கை - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 26 ஆவது கூட்டத்தொடர் ப்ரசல்ஸில் ஆரம்ப...