வீடமைப்பு அதிகார சபையின் கடன்களை தள்ளுபடி செய்யத் தீர்மானம்!
Wednesday, June 6th, 2018
தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கடனைத் தள்ளுபடி செய்ய யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
யாழ்ப்பாண பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிரதேச செயலர் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முன்வைத்தார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் ஆராய்ந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.
Related posts:
மே 2 ஆம் திகதி முதல் சிற்றுண்டிகளின் விலையை அதிகரிக்க முடிவு!
சமஷ்டியையும் தனிநாட்டையும் தமிழ் மக்கள் கோரவில்லை - பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!
வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் யாழ் மாவட்டத்தில் தேர்தல் அலுவலகம் - தேர்தல்கள் ஆணையா...
|
|
|


