அனைத்து விடுமுறைகளும் இரத்து!
Wednesday, June 15th, 2016
அனைத்து தபால் பணியாளர்களினது விடுமுறைகளும் இரத்து செய்யப்படுவதாக தபால்மாஅதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து தபால் திணைக்கள பணியாளர்கள் பணி பகிஸ்கரிப்பொன்றை கடந்த 12ஆம் திகதி முதல் முன்னெடுத்து வருகின்றனர்
மேலும் இவர்களின் விடுமுறைகள் இரத்து தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றரிக்கைக்கு அமைவாக அனைத்து பணியாளர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது குறித்து தெரிவித்த தபால்மா அதிபர் பணியாளர்கள் ஆரம்பித்துள்ள பணி பகிஸ்கரிப்பு தொடர்பில் இன்றைய தினம் தபாற் தொழிற்சங்கத்துடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விரைவில் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை!
மேலும் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள்!
இலங்கையில் மீண்டும் அதிகரித்த மரக்கறிகளின் விலை!
|
|
|


