இயந்திரத்தினுள் கை அகப்பட்டு பெண் படுகாயம்!
Tuesday, June 5th, 2018
தென்மராட்சி – மிருசுவில் பகுதியில் உள்ள தும்புத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பெண் தவறுதலாக இயந்திரத்தினுள் கை அகப்பட்டதில் மணிக்கட்டிற்கு கீழ் கடுமையாக சிதையுண்ட நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மதியம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் கெற்பேலி – மிருசுவிலைச் சேர்ந்த 34 வயதான கமலராஜா கமலாம்பிகை என்ற பெண்ணே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Related posts:
போதையில் திரிந்தால் இரவு முழுவதும் சிறைக்குள் ஓமந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி எச்சரிக்கை!
தென்மாராட்சியில் டெங்குத் தொற்று அதிகரிப்பு!
பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான சர்ச்சை - பல அதிகாரிகளை இடைநிறுத்தியுள்ள மத்திய வங்கி!
|
|
|


