23 வருடங்களுக்குப் பின் யாழில் காணி விடுவிப்பு!
Friday, June 1st, 2018
அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த பொதுமக்களுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
1995 ஆம் ஆண்டு 9 குடும்பங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் காணி இராணுவத்தின் 521 ஆவது படையணியால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த காணியில் 6 குடும்பங்களுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணியே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மிகுதி காணிகளையும் விடுவிக்கும் வரை காணிகளுக்கு செல்லமாட்டோம் என குறித்த காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அரிசிக்கு நிவாரணம் தர கோரிக்கை!
இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் பாராட்டு!
இவ் ஆண்டின் முதல் காலாண்டில் ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீத வளர்ச்சி!
|
|
|


