47 ஆவது அமெரிக்க ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் இன்று!

Tuesday, November 5th, 2024

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று இடம்பெறவுள்ளது.  இதன்படி 47வது அமெரிக்க ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார்.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்காக 186.5 மில்லியன் பேர் தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களில் இதுவரை 78 மில்லியன் பேர் வாக்களித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

000

Related posts: