135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணியை வென்றது இந்தியா!

Saturday, November 16th, 2024

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெற்றது.

நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 283 ஓட்டங்களை குவித்தது.

சஞ்சு சாம்சன் 109 ஓட்டங்களையும், திலக் வர்மா 120 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இதையடுத்து, 284 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.

முன்னணி வீரர்களின் துடுப்பாட்டத்தில் சோர்வு ஏற்பட்டதால் 10 ஓட்டங்களுக்குள் அந்த அணி 4 விக்கெட்களை இழந்தது.

ஸ்டபஸ் மற்றும் மில்லரின் இணைப்பாட்டத்தில் 5வது விக்கெட்டுக்கு 86 ஓட்டங்களைபெற்றனர். மில்லர் 36 ஓட்டங்களையும் , ஸ்டப்ஸ் 45 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா 148 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 3-1 என கைப்பற்றியது

000

Related posts: