கொழும்பில் துப்பாகிச் சூடு – மானிப்பாயில் மூவர் கைது!…..
Saturday, November 8th, 2025
கொழும்பில் துப்பாக்கி சூட்டினை நடத்திய மூவர் இன்றையதினம் (8) யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (07.11.2025) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அந்தவகையில் துப்பாக்கி சூட்டினை நடாத்தியவர்கள் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பதுங்கியிருந்துள்ளனர்.
இந்தநிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், மானிப்பாய் பொலிஸார் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
கொட்டாஞ்சேனையை சேர்ந்த ஆண்கள் இருவரும், பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸ் நிலைய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாரமெடுப்பதற்காக கொட்டாஞ்சேனை பொலிஸார் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
900
Related posts:
|
|
|


