ஹொங்கொங் சிக்சர்ஸ் கிரிக்கெட் தொடர்- இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி!
Sunday, November 3rd, 2024ஹொங்கொங் சிக்சர்ஸ் எனப்படும் 6 ஓவர்கள் கிரிக்கெட் தொடரில் நேபாளம் அணிக்கு எதிரான 3 ஆவது காலிறுதிப் போட்டியில் இலங்கை அணி 40 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நேபாள அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய லஹிரு மதுஷங்க தலைமையிலான இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய நேபாள அணி 5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 83 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற தோல்வியடைந்தது.
000
Related posts:
வில்லியம்சனின் சதத்தால் வெற்றிபெற்ற நியூஸிலாந்து!
மெஸ்ஸிக்கு அபராதம் - போட்டியில் விளையாடவும் தடை!
வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளை முன்னெடுக்க விசேட தினம் அறிவிப்பு
|
|