ஹொங்கொங் சிக்சர்ஸ் – கிண்ணத்துடன் நாட்டை வந்தடைந்தது இலங்கை அணி!

Tuesday, November 5th, 2024

ஹொங்கொங் சிக்சர்ஸ் எனப்படும் 6 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-174 மூலம் இந்தியாவின் பெங்களூரிலிருந்து இன்று காலை 05:25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: