வேதன அதிகரிப்புக்காகத் தாம் உரிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொண்டிருந்தேன் – முன்னாள் ஜனாதிபதி ரணில்!
Wednesday, October 30th, 2024அரச சேவையாளர்களுக்கான வேதன அதிகரிப்புக்காகத் தாம் உரிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொண்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரச பணியாளர்களுக்கு வேதனத்தை அதிகரிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி எதனையும் ஒதுக்கியிருக்கவில்லை எனப் பிரதமர் ஹரினி அமரசூரிய கொஸ்கம பகுதியில் வைத்து முன்னதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் நினைத்த உடனேயே ஜனாதிபதியினாலோ, பிரதமராலோ வேதனத்தை அதிகரிக்க முடியாது. அவ்வாறு ஒரு தீர்மானத்தை எடுத்தால் அதற்கான நிதியை ஒதுக்குவதற்கு திறைசேரியின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் பன்னல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது இதற்குப் பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரச சேவையாளர்களுக்கான வேதன அதிகரிப்பை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தற்போதைய அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாம் அரசாங்கத்தைக் கையளிக்கும் போது மூன்று மாதங்களுக்குத் தேவையான கொடுப்பனவை வழங்குவதற்கான கையிருப்பு காணப்பட்டது.
கடந்த காலங்களில் நாம் முன்னெடுத்திருந்த திட்டமே தற்போதும் முன்னெடுக்கப்படுகிறது. அமைச்சரவை தீர்மானங்களை மேற்கொண்டு அதனைச் செயற்படுத்துவதற்கு அரச அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட வேண்டிய அவசியமில்லை.
அரசியலமைப்பிற்கு இணங்க, அமைச்சரவையே ஆட்சி செய்ய வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
000
Related posts:
|
|