முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளர் டிவகலாலாவின் மனைவியாரின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

….
வடக்கு-கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளரும் ஆறுதல் நிறுவனத்தின் ஸ்தாபகருமான சுந்தரம் டிவகலாலாவின் மனைவியாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தினார்
சில தினங்களுக்கு முன்னர் வயது மூப்பின் காரணமாக அமர்ர் சிவமலர் டிவகலாலா காலமானார்.
இன்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் அன்னாரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் அன்னாரின் இல்லத்திற்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்பு மலர் மாலை அணிவித்து தனது இறுதி அஞ்சலியை செலத்தியதுடன் அன்னாரது குடும்பத்தினருக்கு தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்
செயலாளர் நாயகத்துடன் கட்சியின் முக்கியஸ்தர்களான எஸ்.தவராசா, திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜா, மற்றும் தயானந்தா உள்ளளிட்ட பலரும் அன்னாரது பூதவுடலுக்கு
தமது இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது




Related posts:
|
|