பெப்ரவரியில் இலங்கை வருகின்றார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி!

Sunday, October 27th, 2024

  

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது அரச முறை வெளிநாட்டு விஜயமாக இந்தியா செல்ல உள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ஜனவரி மாதத்தில் டெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழு பங்கேற்க உள்ளது.

இதன்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளனர்.

இலங்கை – இந்திய பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார உறவுகள் குறித்து பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளில் இருதரப்பும் ஈடுபட உள்ளன.

இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்திய திட்டங்கள் குறித்து இலங்கை குழு அவதானம் செலுத்த உள்ளது.

இதேவேளை, பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்திற்கான அழைப்பினை அநுரகுமார கையளிக்க உள்ளார். மோடியின் விஜயமானது இலங்கையின் சுதந்திர தினத்தன்று இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

000

Related posts: