பின்னடைவை நமது முயற்சியின் போதாமையால் ஏற்பட்ட தற்காலிக சம்பவமாகவே பார்க்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

பின்னடைவுகள் என்பது நமது முயற்சியின் போதாமையால் ஏற்பட்ட ஒரு தற்காலிக சம்பவமாகவே பார்க்க வேண்டும். அந்த தற்காலிக சம்பத்திலிருந்து அக புற நிலைகளில் இருந்து நாம் ஒவ்வொருவரும் உணர்வு ரீதியாக ஆராய்ந்தால், அதற்கான விடை கிடைக்கும். அந்த பெறுபோறு நமக்குப் பல பாடங்களைக் கற்றுத்தருவதுடன் அதனை உந்துசக்தியாக வைத்து அடுத்த கட்டத்தை நோக்கி நாம் வலுவாக பயணிக்கவும் முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியியை கட்டமைப்பு ரீதியில் வலுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தவரும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அதன் ஒரு பகுதியாக இன்றையைதினம் (16.02.2025) கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு அம் மாவட்டத்தின் அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது மக்களுக்காக தியாகம் செய்த தோழர்களை நினைவுகூர்ந்து அஞ்சலித்த பின் கரு்த்து கூறியிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில் –
நாடாளுமன்ற தேர்தலின் பின்னரான களச் சூழலை முன்னிறுத்திய வகையிலும் தற்போது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை அடையாளப்படுத்தியும், அவற்றை தீர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய்வது அவசியமாகும்.
அதுமட்டுமல்லாது அவை தொடர்பில் கவன ஈர்ப்பு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது.
மேலும் மக்களுக்களின் தேவைகளுக்கான தீர்வுகள் கடந்தகாலங்களில் அதிகளவு பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்த போதிலும் அவை கட்சியின் அரசியலுக்கான வலுப்படுத்தலாக அமையவில்லை. இவையும் தேர்தல் பின்னடைவுக்கான காரணிகளுள் ஒன்றாக இருந்துள்ளது.
அந்தவகையில் ஈ.பி.டி.பி. கட்சியின் தூரநோக்குள்ள அரசியல் பொறிமுறையையும், முன்னெடுக்கின்ற செயற்பாடுகளின் நியாயத்தையும் மக்கள் ஏற்று அதன்வழி அவர்களை அழைத்துச் செல்லும் வகையில் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் இருப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
00
Related posts:
|
|