பாசமிக்க என் தேசத்து உறவுகளுக்கு,…
Wednesday, November 27th, 202427.11.2024
பாசமிக்க என் தேசத்து உறவுகளுக்கு,…
தோழமையுடன்
அன்பு நிறைந்த வணக்கம்!,..
வலுவான நம்பிக்கைதான்
இலட்சிய கனவுகளின்
வெற்றியை தரும்,..
வற்றாத நதியாகவே என் நம்பிக்கை இன்னமும்
ஓடிக்கொண்டிருக்கிறது,..
உங்களோடு நான் பேச நினைப்பவைகள் ஏராளம்,..
ஆனாலும்,.. உங்கள் மத்தியில்
ஓயாமல் நான் ஆற்றி வந்த களப்பணிகளின் வேலைப்பழு காரணமாக
எமது கட்சியின் கருத்துக்களை
உங்களோடு முழுமையாக பகிர்ந்து கொள்ள முடிந்திருக்கவில்லை,..
இப்போது காலம் எனக்கொரு இடை வெளியை தந்திருக்கிறது,..
இந்த இடை வெளி நான் உறங்குவதற்கோ அற்றி
ஓய்ந்திருப்பதற்கோ கிடைத்தது அல்ல,..
ஓரடி பின்னால் ஈரடி முன்னால்
என்ற முன்னோக்கிய எமது இலட்சிய பயணத்தை மேலும் திட்டமிடுவதற்கே என் மணித்துளிகள் ஒவ்வொன்றையும்
நான் பயன்படுத்தி வருகின்றேன்.
கார்முகில்கள் சூழ்ந்து வரினும்
எமது கட்சியின் கடும் பயணம் ஒரு போதும் நிற்காது,..
அலை வந்து அடித்தாலும் நிலை குலையாத மனவுறுதியை
வரலாறு எமக்கு வழங்கி வந்திருக்கிறது,..
நான் அரசியல் அதிகாரத்தில் இல்லை என்ற எண்ணம் எனக்கில்லை,..
ஆனாலும் எமது அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு
மக்களாகிய உங்களுக்கு
ஆற்றி வந்த பணிகள் சற்று
ஓய்ந்திருப்பது மட்டுமே எனக்கிருக்கும் துயரமாகும்.,,
நீங்கள் எம்மிடம் கேட்டவைகள்
அனைத்தையும் நான் நிறைவேற்றியவன் என்றில்லை,..
ஒரு சில விடயங்கள் முடியாமலும் போயிருக்கும்.
காலமும் சூழலும் சில இடங்களில் தடையாகவும்
இருந்திருக்கிறது,..
ஆனாலும் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற
நான் எடுத்த ஓயாத முயற்சிகளை நீங்கள் உணர்வீர்கள்,..
பொறுத்திருங்கள்,.. ஆனாலும் விழிப்புடன் இருங்கள்,..
உங்கள் கனவும் எங்கள் கனவும்
ஒன்றே,..
அது நிச்சயம் நிறைவேறும்,..
நாம் செல்லும்….
பயணம் வெல்லும்….
மத்தியில் கூட்டாட்சி…..
மாநிலத்தில் சுயாட்சி…..
- தோழமைத் தலைவர் உங்கள் - டக்ளஸ் தேவானந்தா -
Related posts:
|
|