நேசிக்கின்ற மக்களுக்களின் எதிர்பார்ப்புக்களை முழுமையாக நிறைவேற்றுவதில் இடைவெளி – நாடாளுமன்றம் செல்ல முடியவில்லையென சிறிதளவும் சிந்திக்க வில்லை- செயலாளர் நாயகம் டக்ளஸ்!
Tuesday, November 19th, 2024நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நாம் நேசிக்கின்ற மக்களுக்களின் எதிர்பார்ப்புக்களை முழுமையாக நிறைவேற்றுவதில் இடைவெளியை ஏற்படுத்திவிட்டது என்பதை தவிர, தனிப்பட்ட முறையில் நாடாளுமன்றம் செல்ல முடியவில்லையென சிறிதளவும் சிந்திக்க வில்லை என ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்ச மாவட்ட கட்சி செயற்பாட்டாளர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் மேற்கண்டவாறு தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள், முடங்கி கிடப்பதற்கு ஈ.பி.டி.பி கொள்கை இல்லாது அல்லது அந்த இலக்கினை அடைவதற்கான வேலைத்திட்டங்கள் இல்லாத கட்சியோ இல்லை என தெரிவித்த அவர் கட்சி செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும், விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் செய்து கொண்டு மக்களக்கான வேலைத் திட்டங்களை தொடர வேண்டும் எனவும், உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபை தேர்தல்கள் நடைபெற இருப்பதனை மனதில் வைத்து அவற்றுக்கு தயாராக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
000
Related posts:
|
|