நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பம்!
Tuesday, October 1st, 2024எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பமாகவுள்ளது.
இந்த பணிகள் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்த அனைவரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மீண்டும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, தகுதியான அனைத்து விண்ணப்பதாரிகளும், விண்ணப்பங்களை எதிர்வரும் 8ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தமது மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் கையளிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
000
Related posts:
புதிய பிரதமராக நிமால் சிறிபாலடி சில்வா: தினேஷ், சுசில் ஒன்றிணைந்த குழு நியமனம்!
வெளிநாட்டவரின் வதிவிட நுழைவிசைவுக்கு புலனாய்வு பிரிவின் அனுமதி அவசியம்!
நிர்ணய விலையை மீறி தேங்காயினை விற்பனை செய்வோரை கைது செய்ய திட்டம்..!
|
|
அரச பேருந்தில் பயணிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்றினால் இழப்பீடாக 10,000 உயிரிழந்தால் 50,000 - பற்றுச...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவிப...
எந்தவொரு நாட்டுக்கும் தனியாக முன்னேற முடியாது - இந்திய - இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதே நோக்கமாகும...