தோழர் காளியின் தந்தையாரது, பூதவுடலுக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Tuesday, June 17th, 2025


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் காளி(நாகராசா) அவர்களது தந்தையான, பளை மாசார் பகுதியை சேர்ந்த  அமரர் குமாரவேலு தர்மலிங்கம் ( தம்பிராசா) அவர்களது பூதவுடலுக்கு தோழர் டக்ளஸ் தேவானந்தா மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன், அன்னாரது மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.

இதன்போது, செயலாளர் நாயகத்தின் பிரத்தியேக செயலாளர் கே.தயானந்தா, ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினருமான வை.தவநாதன் மற்றும் கட்சியின் பளை பிரதேச நிர்வாக செயற்பாட்டாளர் ரவிச்சந்திரன் சுதர்சினி  கட்சி ஆதரவாளர் மேரி அனுஜா ஆகியோரும் தமது அஞ்சலி மரியாதையை செலுத்தியிருந்தனர்.

Related posts: