தொடரை எங்கு நடத்துவது – இறுதித் தீர்மானம் எடுக்கும் நோக்கில் கூடுகின்றது கிரிக்கெட் பேரவை!

Wednesday, November 27th, 2024

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரை எங்கு, நடத்துவது என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் நோக்கில் எதிர்வரும் 29ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவை கூடவுள்ளது.

பாகிஸ்தானுக்குப் பயணம் செய்யத் தயாரில்லை என இந்தியா அறிவித்துள்ளதுடன், வேறொரு நாட்டில் தங்களுடைய போட்டிகளை விளையாட விருப்பம் தெரிவித்துள்ளது.

எனினும், பாகிஸ்தான் இந்தியாவின் தீர்மானத்தை மறுத்திருந்தது.  இந்தநிலையில், தற்போது இடம்பெறவுள்ள இந்த சந்திப்பு இணையவழி ஊடாக இடம்பெறும் என்றும், பேரவையின் ஒருமித்த கருத்தின் பின்னர் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இடம்பெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன.

எனினும், போட்டிகளுக்கான திகதிகளையோ, முறையான அட்டவணையோ சர்வதேச கிரிக்கெட் பேரவை இதுவரையில் அறிவிக்கவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது

000

Related posts: