தொடரும் கனமழை – அதிகரிக்கும் வெள்ளம் – வடக்கு மாகாணத்தில்  64 ஆயிரம் ஹெக்ரயார் நெல் வயல்கள் பாதிப்பு!

Thursday, November 28th, 2024

மழை வெள்ளம் காரணமாக வடக்கு மாகாணத்தில் சுமார் 64000 ஹெக்ரயார் நெல் வயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் சுமார் 23000 ஹெக்ரயார் நெல் வயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதிகளவான பகுதிகளில் நெல் விதைக்கப்பட்ட சில தினங்களில் இவ்வாறு மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அநேக பகுதிகளில் குளக்கட்டுக்கள் உடைந்த காரணத்தினால் இவ்வாறு பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்கினாலும், அடுத்த போகத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளன

00

Related posts: