தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகரும் சக்திமிக்க தாழமுக்கம் – வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!
Friday, November 29th, 2024திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையில் இருந்து சுமார் 290 கிலோ மீற்றர் தொலைவிலும் நிலை கொண்டிருந்த சக்திமிக்க தாழமுக்கமானது தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், நாட்டின் வானிலையில் காணப்படும் தாக்கமானது இன்று (29) முதல் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், வட மாகாணத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.
மேல், சப்ரகமுவ, வட மேல் மாகாணங்களிலும் கண்டி, மாத்தளை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும வடமேல், தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வரையில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திடம் கோரப்பட்டுள்ளது.
000
Related posts:
|
|