டக்ளஸ் தேவானந்தாவின் பிடியாணை இரத்து!

Monday, November 25th, 2024

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று(25.11.2024) நீதிமன்றில் ஆஜரான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்த நிலையில், பிடியாணை இரத்து செய்யப்பட்டுள்ளது.

தனியார் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டிருக்கின்றது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முறைப்பாட்டாளரான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மன்றில் ஆஜராகாத நிலையில், நீதவானினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று மன்றில் ஆஜராகிய நிலையில் பிடியாணை இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இயற்கை அனர்த்தங்களின்போது மக்கள்மீதும், இயற்கை மீதும் பழிபோடுவது முறையா?சபையில் டக்ளஸ் தேவானந்தா கேள...
வடக்கு வாழ் இந்து குருமார்கள் ஒன்றியத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விஷேட சந்திப்பு!
கடந்தகாலங்களில் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட பிரதேசங்களை விடுவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமைய...