சவூதி அரேபியாவில் முதன் முறையாக தோன்றிய பனிப்பொழிவு!
Saturday, November 9th, 2024சவூதி அரேபியாவின் (Saudi Arabia) அல்-ஜவ்ஃப் பகுதியில் முதல் முறையாகக் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும் காணொளிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
இவ்வாறான வறண்ட பாலைவன நிலப்பரப்பில் இந்த நிகழ்வுகள் ஏற்படுவது அதிசயமாகப் பார்க்கப்படுகின்றது.
எனினும், அரபிக் கடலிலிருந்து உருவாகி ஓமன் வரை நீண்டு இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இந்த பனிப்பொழிவிற்குக் காரணம் என சவூதி அரேபியாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்து வரும் நாட்களில் கடுமையான வானிலை நிலவும் என்றும் பலத்த மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.
இந்த வானிலை காரணமாக வாகன சாரதிகள் சிரமத்திற்கு ஆளாகலாம் என்றும் மக்கள் கவனத்துடன் செயற்படுமாறும் தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது
000
Related posts:
|
|