சந்திரகுமார் அன் கொம்பனியை மக்கள் விரட்டியடிக்க வேண்டும்  – தவநாதன் சாட்டையடி!

Sunday, November 3rd, 2024

கட்சியை காப்பாற்ற தெரியாத ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மு.சந்திரகுமார், மக்களை காப்பாற்றப் போவதாக ஆணை கேட்பது வேடிக்கையானது  என்று வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.

ஈ..பி.டி.பி. சார்பில் நாடாளுன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தவநாதன், இரணைமாதா நகர் பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி. கட்சிக்கு மக்கள் அளித்த வாக்குகளினால் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன், ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசினால் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவியையும் வகித்திருந்தார்.

அதேபோன்று, ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகத்தின் வழிநடத்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும், அன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான செயற்பாடுகளையும் தன்னால் முன்னெடுக்கப்பட்டவையாக தற்போது மக்களுக்கு கூறிவருகின்றார்.

அதேபோன்று, மலையகத்தினை பூர்வீகமாக கொண்ட எமது மக்கள் புறக்கணிக்கப்படுவதாக நீலிக் கண்ணீர் வடித்து அவர்களின் வாக்குளை சூறையாடுகின்றவர், மலையக மக்கள் சார்பில் ஒரு பிரதிநிதியைக் கூட தேர்தல் களத்தில் நிறுத்துவதற்கு முடியவில்லை.

எனவே, மக்களை ஏமாற்றி தென்னிலங்கை கட்சிக்கு வாக்கு சேகரித்து கொடுப்பதற்காக கங்கணம் கட்டி நிற்கின்ற சந்திரகுமார் கம்பனியினருக்கு மக்கள் நல்ல பாடத்தினை கற்பிக்க வேண்டும். அவ்வாறானவர்களை வாக்கு சீட்டுக்கள் மூலம் மக்கள் விரட்டியடிக்க வேண்டும்”  என்று தெரிவித்தார்.

Related posts:

‘இழப்பீட்டு அலுவலகம் வெகுவிரைவில்’ என விளம்பரங்களில் காட்டப்பட்டு வருகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் ...
புரவி புயலால் பேரழிவை சந்தித்த வடபகுதி மக்களுக்கு விஷேட இழப்பீடுகள் வழங்க அமைச்சர் டக்ளஸ் அமைச்சரவைய...
இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி ஜெ சங் - அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு – சமகால அரசியல் நில...

உள்ளூராட்சி மன்றங்களில் ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக செயற்படுங்கள் - வலிகாமத்தில் செயலாளர் நாயகம் டக்...
ஊரடங்கு நேரத்தில் பிடிக்கப்படும் கடலுணவுகளை இறக்குவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் நடவடிக்கை – அமைச்ச...
நிர்க்கதியானவர்கள் வீடு திரும்ப புதனன்று தீர்வு – அமைச்சரவையில் கோரிக்கை வைக்கிறார் அமைச்சர் டக்ளஸ் ...