கொள்கை அடிப்படையிலேயே முன்னாள் சுகாதார அமைச்சரின் மருந்து இறக்குமதிக்கான அமைச்சரவை யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டது – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Wednesday, November 27th, 2024பொதுவாக தேர்தல் அறிவிக்கப்படும்போது அரசியல் கட்சிகள் பொதுவாக மற்றைய கட்சிகள் மீது சேறுபூசுவது வழமை. அதுபோலவே இம்முறை எம்மீது அளவுக்கு அதிகமான அளவில் இல்லாத பொல்லாத விடயங்களை எல்லாம் சமூக ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தியிருந்தார்கள் என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இத்தகைய அவதூறுகளால் எமது அரசியல் பணிகள் ஒருபோதும் முடங்கிவிடப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மருந்துகளின் அவசியத் தன்மையுடன் தங்களுக்கு வழங்கப்பட்ட தரவுகளுக்கு அமைய, கொள்கை அடிப்படையிலேயே, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த மருந்து இறக்குமதிக்கான அமைச்சரவை யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் சர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு தொடர்பில் முந்தைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே தாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் இது தொடர்பில் சமூக ஊடகங்களில் பல பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் –
Related posts:
|
|