கொள்கையற்றவர்களின் புலம்பல்கள் எம்மை எதுவும் செய்துவிடப்போவதில்லை –   ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறிரங்கேஸ்வரன்!

Tuesday, November 5th, 2024

கொள்கையற்றவர்களின் புலம்பல்கள் எம்மை எதுவும் செய்துவிடப்போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ள என ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தேசியம் உரிமை என்று பல்வேறு கவர்ச்சிகரமான உணர்ச்சியூட்டும் கோசங்களை முன்வைத்து தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்துவந்த இதர தமிழ் அரசியல் தரப்பினர் இம்முறை அந்தக் கோசத்தை மக்கள் புறந்தள்ளிவிடுவார்கள் என்ற அச்சத்தால் தமது கொள்கையையும் கோசங்களையும் மாற்றியுள்ளனர் எனவும் தெரிவித்தள்ளார்

யாழ் ஊடக அமையத்தில் இன்று (05.11.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

தமிழ் தேசியம் என்ற கோசம் தற்போது வியாபார பொருளாக மாறியுள்ளதால் தற்போது ஊல் மோசடி என்று பலர் புலம்பத் தொடங்கியுள்ளனர்.

தமிழ் மக்களின் வாழ்வியல் எதிர்காலம் தொடர்பாகவோ அன்றி அவர்களது தேசியம் தொடர்பிலே எந்தவோர் அக்கறையும் இல்லாது தத்தமது சுயவிருப்பங்களை ஈடேற்றிக்கொள்ள காலத்துக்கு காலம் தேர்தல் மேடைகளில் பல்வோறு கோசங்களை முன்வைத்து மக்களின் வாக்குகளை இதுவரைகாலமும் அபகரித்தவர்கள் இன்று சின்னாபின்னமாக சிதறிவிட்டனர்.

குறிப்பாக அவர்களது அரசியல் பருவகாலக் கொள்கைகள் சிதறுண்டு போனது போன்றே தற்போது கூட்டமைப்பு என்ற வாக்கு அபகரிப்பு கட்டமைப்பும் இடம்தெரியாது போய்விட்டது.

ஆனால் ஈ..பி.டி.பியினராகிய எம்மிடம் நிலையான கொள்கை, தடம் மாறாத தலைமை தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் சிறந்த பொறிமுறை என்பன இருக்கின்றது.

நாம் மக்களிடம் போலி வாக்குறுதிகளையோ உசுப்பேற்றல் கதைகளையோ கூறுவது கிடையாது எது யதார்த்தமோ எது நடைமுறைக்கு சாத்தியமோ அதையே வெளிப்படையாக கூறி மக்களிடையே எமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துகொண்டிருக்கின்றோம்.

அதனால்தான எமது கட்சியின் கொள்கை நிலைப்பாடு இன்று வெற்றி கண்டுள்ளது. அதுமட்டுமல்லாது அதையே இன்று ஏனையோரும் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது எமது “மடியில் எந்தவிதமான கனமும் இல்லை”. அதனால் வழிப் பயணத்திற்கு அஞ்சவேண்டிய தேவையும் எமக்கு இருக்காது. அதனால் மாற்றம் என்ற கோசம்    எம்மை எதுவும் செய்துவிடப்போவதில்லை.

ஆனாலும் இம்முறை கடந்தகாலங்களை விட அதிகமான ஆசனங்கள் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இருக்கின்றது.

அந்த எதிர்பார்ப்பை இம்முறை மக்கள் நிச்சயம் தமது வாக்குப் பலத்தை கொண்டு எமது வீணைச் சின்னத்துக்கு வழங்கி தமது அன்றாடம் முதல் அரசியல் உரிமை பிரச்சினைவரையான அபிலாசைகளுக்கு தீர்வுகளை வென்றெடுப்பார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: