கேவில் பகுதி மக்கள் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும் அன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பினரே காரணம் – ஈ.பி.டி.பி ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சாடல்!
Monday, November 11th, 2024தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் சுயநல போக்கின் காரணமாகவே வடமராட்சி கிழக்கு கேவில் பிரதேச மக்கள் இன்று அனுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
வடமராட்சி கிழக்கு கேவில் பிரதேசத்தில் ஈ.பி.டி.பியின் வீணை சின்னத்திற்கு ஆதரவினை தெரிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –
வடமராட்சி கிழக்கு மக்கள் தமது வாழ்வாதார நடவடிக்கைகளை சாதாரண வகையிலேயே முன்னெடுதது வந்திருந்தனர். இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு நாட்டில் உருவாகியிருந்த நல்லாட்சி அரசு பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி அதனூடாக மக்களின் காணி நிலங்களை கையகப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டது.
குறிப்பாக அன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் முழுமையான ஒத்துழைப்புடனேயே நல்லாட்சி அரசாங்கம் தனது பலத்தை தக்கவைத்துக்கொண்டிருந்தது.
இந்த அரசாங்கத்தில் நிழல் அமைச்சராக வலம்வந்கோண்டிருந்த சுமந்திரனது முழுமையான ஒத்துழைப்புடன் வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் தொடர்பிலான சட்டத்தை தொல்லியல் திணைக்களம் உருவாக்கியிருந்தது.
உருவாக்கப்பட்ட குறித்த சட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றுதற்கு சமர்ப்பிக்கப்ட்டபோது தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமக்கான கையூட்டல்களை கோடிகளில பெற்று ஆதரவாக வாக்களித்து சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்திருந்தனர்.
இதன் விளைவாக வடக்கில் மக்களின் விவசாய நிலங்கள் குடியிருப்பு நிலங்கள் மேச்சல் தரைகள் என பல ஏக்கர் காணி நிலங்கள் குறித்த திணைக்களத்தின் அதிகாரத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.
இதனால் சந்ததி சந்ததியாக தமது வாழ்வியலை கொண்டு நகர்த்திவந்த ஏழை மக்கள் தமது விவசாய நிலங்களையும் குடியிருப்புகளையும் இழக்கும் நிலை ஏற்பட்டது. விவசாய நிலங்கள் குறித்த திணைக்களத்தின் சுவீகரிப்புக்கு உள்ளானதால் பல நூறு குடும்பங்கள் விவசாயம் செய்ய முடியாது தடுக்கப்பட்டு குடும்ப வருமானம் இன்றி தொழிலற்று வீதிக்கு வரும் நிலை உருவானது.
தமது சுயநல தேவைக்காக சட்டங்களை நிறைவு செய்வதற்கு அரசுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் மக்களின் நலன்களையோ அவர்களது எதிரகாலம் தொடர்பிலோ சிறிதளவும் சிந்திக்கவில்லை. இதனால் வடமராட்சி கிழக்கு கேவில் மக்கள் இன்று தமது காணிகளில் விடுகளை அமைக்கவோ, வீடுகளுக்கு மின்சாரமோ குடி நீர் திட்டத்தையோ பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு மக்களின் வயிற்றில் அடித்து தமது குடும்பங்களை சுகபோகமாக வாழ வைத்தவர்கள் இன்று பதவிக்கான சண்டையால் அந்த கூட்டமைப்பை சின்னாபின்னமாக சிதறடித்துவிட்டு பூச்சி புழு பாம்பு பல்லி என பல்வேறு சின்னங்களில் இம்முறை தேர்தலில் தம்மை நல்லவர்களாக காட்டிக்கொண்டு மக்களிடம் வாக்கு கேட்க வருகின்றனர்.
இத்தகையவர்களின் போலி தேசியவாதிகளின் வேசங்களுக்கு இம்முறை மக்கள் செவிசாய்க்க மாட்டார்கள் என்பது மக்களின் மனங்களிலிருந்து தெரிகின்றது.
இதேநேரம் வறிய மக்களின் நலகன்கள், அவர்களது வாழ்வியல் மேம்பாடடைய வேண்டும் என்ற நோக்ககுடன் மக்களுக்காக உழைத்துவரும் ஒரே ஒரு கட்சியாக ஈ.பிடி.பி கட்சியே இருந்துவருகின்றது.
குறிப்பாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. இதுவே இன்று வெற்றியும் பெற்றுள்ளது. அத்துடன் எமது கொள்கை மிகவும் வலுவானதாகவும் இருக்கின்றது அதனால்தான் நடைமுறை சாத்தியமான எமது கொள்கையே நோ்கி இம்முறை மக்கள் அணிதிரள வேண்டம் என நாம் உங்களிடம் அழைப்பு விடுக்கின்றோம்
அத்துடன் தமிழ் மக்கள் தமது வாக்குரிமை என்ற அதிகாரத்தைக் கொண்டு வீணைச் சின்னத்தை வலுப்படுத்தி, இதுவே இம்முறை நிகழும் மாற்றமாக அமைய வேண்டும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|