கட்டணத்தை குறைப்பதற்கு யோசனை –  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Friday, October 25th, 2024

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய விலை சூத்திரத்தின் அடிப்படையில் இந்த முன்மொழிவு வகுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்மொழிவை மதிப்பாய்வு செய்து, அதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் மின்சாரக் கட்டணங்களில் சதவீதக் குறைப்புகளை அறிவிக்கும்.

இதேவேளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் காணப்படும் வெற்றிடங்களுக்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் மூன்றாவது தடவையாக மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணையை, மின்சார சபை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: