ஈ.பி.டி.பி. தொடர்பான சிலரின் தவறான புரிதல்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்!.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலைத் திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதுடன், மக்களில் சிலரின் மத்தியில் காணப்படும் கட்சி பற்றிய தவறான புரிதல்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வலி வடக்கு பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகளை செழுமைப்படுத்தும் நோக்கில் இன்று(23.05.2025) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இது வலியுறுத்தப்பட்டது.
மேலும், அண்மைய தேர்தல்ளில் வலி வடக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கான காரணங்களை கண்டறிந்து நிவர்த்தி செய்தல், வட்டாரக் குழுக்களை வலுப்படுத்தல் மற்றும் பிரதேச சபையில் காத்திரமான எதிர் தரப்பாக செயற்படுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
இதன்போது, செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய, கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஜீவன் மற்றும் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியினதும், செயலாளர் நாயகத்தினதும் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக எடுத்துரைத்தனர்.
வலி வடக்கு பிரதேசத்தினை சேர்ந்த கட்சி முக்கியஸ்தர்கள், அண்மைய உள்ளூரதிகார சபை தேர்தல் வேட்பாளர்கள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில், வலி வடக்கு பிரதேசத்திற்கான கட்சி அமைப்பாளர் அன்பு, உதவி அமைப்பாளர் ஸ்ரீதரன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபைக்கு கட்சியினால் நியமனம் செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்
Related posts:
|
|