இஸ்ரேல் மீது வான் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா !

Tuesday, November 26th, 2024

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று முன்தினம் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் அருகே வீடுகள் மட்டுமே அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும் டெல் அவிவின் கிழக்குப் பகுதியில் உள்ள பெட்டா திக்வா பகுதியில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும்,

பலருக்குச் சிறியளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் பொலிஸார்  தெரிவித்தனர். எவ்வாறாயினும், டெல் அவிவ் மற்றும் அதனை அண்டிய இரண்டு இராணுவ தளங்களின் மீது துல்லியமான ஏவுகணைகளை ஏவியதாகக் ஹிஸ்புல்லா குறிப்பிடுகிறது.

இதேவேளை ஜோர்டான் நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர். இஸ்ரேலின் அண்டை நாடான ஜோர்டான் தலைநகரம் அம்மான் அருகே ரபியாவில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது.

குறித்த பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட பொலிஸார்  மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பொலிசார் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: