இளம் சமூகத்திரனரது குரலாக ஓங்கி ஒலிப்பேன் – ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர் புவி!

Wednesday, October 23rd, 2024

தமிழ் மக்களுக்கு ஆரசியல் உரிமைகளுடன் கூடிய சிறப்பானதொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறிமுறையும் கொள்கையும் ஈ.பி.டி.பியிடமே இருக்கின்றது என சுட்டிக்காட்டிய சட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கிருஸ்ணன் புவி, வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான ஆணையை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமைக்கு வழங்குங்வனூடாக அதை சாத்தியமாக்கிக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (23.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கப் பெற்று அவர்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக உள்ளது. அத்துடன் அந்த இலக்கை எட்டுவதற்காக வழிகாட்டுவதற்கு ஈ.பி.டி.பி எப்போதும் தயராக இருக்கின்றது.

தமிழர் அரசியல் புலத்தில் மாற்றம் நிச்சயமாக எற்படுத்தப்பட வேண்டும் ஏனெனில் பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் இயங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்புக்கும் தமது ஆதரவு பலத்தை வழங்கி வந்திருக்கின்றார்கள்.

குறிப்பாக 2004 இல் அவர்களுக்கு 22 ஆசனங்களை கொடுத்தும் அதன்பின்னரான காலங்களில் 16,10 என ஆணை வழங்கியிருந்தனர்.

ஆனாலும் மக்களது அந்த ஆணையை பெற்றுக்கொண்டவர்கள் தமது குடும்பங்களின் நலன்களை மட்டும் சீர்தூக்கி விட்டுள்ளனரே தவிர தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்திருக்கவில்லை.

அத்துடன் பதவிகளுக்காக ஒன்றுகூடிய அந்த தரப்பினர் தமக்குள் பதவி சண்டையிட்டு இன்று சின்னாபின்னமாக சிதறிவிட்டனர். அதுமட்டுமல்லாது அந்த கூட்டமைப்பு என்ற ஒன்று தேர்தல் களத்தில் இன்று இல்லாதும் போய்விட்டது.

இதேநேரம் ஒரு அரசியல் மாற்றத்துக்கான சூழ்நிலை காணப்படுகின்றது. அந்த மாற்றத்தால் சுயல போலித் தேசிய தரப்பினரிடமிருந்து தமிழ் மக்கள் இம்முறை விடுபடுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அதுமட்டுமல்லாது அந்த மாற்றம் ஈ.பி.டி.பியினரது எமது பக்கமாக இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது.

இதேவேளை கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை தவறவிடாது அச்சந்தர்ப்பங்களை கொண்டு தமிழ் மக்களின் அபிலாசைகளை முடியுமானவரை ஈடுசெய்து கொடுத்து வெற்றிகண்ட தலைவரான செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் வடக்கின் இளம் சமூகத்திரனரது குரலாக நாடாளுமன்றில் ஒலிப்பதற்காகவவே எனது இந் நாடாளுமன்ற தேர்தல் பிரவேசம் இருக்கின்றது.

அந்தவகையில் தமிழ் மக்கள் தமது வாக்குரிமையைக் கொண்டு வீணைச் சின்னத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். அந்த வலுப்படுத்தல நிச்சயம் இம்முறை நிகழும் என்று நம்பிக்கை எமக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: