இலக்கத் தகடுகளை வழங்குவது தொடர்பில் வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Sunday, November 3rd, 2024

வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக புதிய வாகனப்பதிவுகள் மற்றும் வாகனப் பெயர்ப்பதிவுகளின் போது இலக்கத் தகடுகளை வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, புதிய வாகனப் பதிவின் போது வாகன உரிமையாளர்களுக்கு வாகன இலக்கத்தகடு வழங்காமை குறித்து கடிதமொன்று வழங்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே மறு அறிவித்தல் வரை வாகன உரிமையாளர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்த வேண்டாம் என பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த வருடம் பெப்ரவரி மாதம்முதல் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் புதிய அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

000

Related posts: