அலையென திரண்டனர் இரணைமாதா நகர் மக்கள் – வீணையே தமது ஏக தெரிவென முளக்கம்.!
Sunday, November 3rd, 2024நிச்சயமற்ற எதிர்காலத்துடன் பொருளாதார ரீதியிலும் வலுவிழந்துகிடந்த எமது பிரதேசத்தையும் மக்களையும் மீண்டும் ஒளிமயமான வாழ்வியலை நோக்கி செல்வதற்கான பிரகாசத்தை வழங்கிய ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை அரசியல் ரீதியாக வலப்படுத்துவதே இம்முறை ஏற்படவுள்ள மாற்றமாக அமையும் என தெரிவித்துள்ள இரணைமாதா நகர் மக்கள் அதுவே தமது நோக்கமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் பிரசார நடவடிக்கைகளுக்காக இன்றையதினம் இரணைமாதா நகர் சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை அங்கு கூடியிருந்த நூற்றுக்கன மக்கள் வரவேற்று தமது ஆதரவினை நேரில் தெரிவித்திருந்த நிலையில் கருத்துரைக்கும் போதே மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த காலங்களில் தாம் தவறாக வழிநடத்தப்பட்டதால் பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்துவந்ததாகவும், யுத்தம் நிறைவுக்கு வந்தபின்னர் தமது வாழ்வியல் நிலை பல்வேறு கேள்விக்குறியுடன் இருந்த நேரத்தில் எதுவித எதிர்பார்ப்புகளும் இன்றி தமக்கும் தமது பிரதேசத்திற்கும் அபிவிருத்திகளையும் வாழ்வாதார உதவிகளையும் பெற்றுத்ததந்து தமக்கு எதிர்காலத்தை வெற்றிகொள்ள சிறப்பான வழியைகாட்டி வாழ்வதற்கு வழிசமைத்து தந்ததையும் மக்கள் இதன்போது நினைவு கூரியிருந்தனர்.
மேலும் எவருக்கும் அடிபணியாத கொள்கையுடன் நடைமுறைக்கு சாத்தியம் இதுதான் என வெற்றிபெற்ற மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையுடன் மக்களுக்காக உழைத்துவரும் ஈ.பி.டி.பியின் பாதையே சரியானதென தாம் தற்போது மிகவும் உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் தமிழர் அரசியல் பரப்பில் அரசியல் மாற்றம் மிக அவசியமானதொன்று என்றும் அந்த மாற்றத்தை இம்முறை தாம் ஈ.பி.டி.பியின் பக்கம் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|