7 விக்கட்டுகளினால் கொல்கத்தா அணி வெற்றி!

Saturday, May 4th, 2019

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு இடம்பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட்றைடர்ஸ் அணி 7 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை பெற்றது.

இதையடுத்து, 184 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய கொல்கத்தா அணி, 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை கடந்தது.

நான்கு அணிகள் தகுதிகாண் சுற்றுக்கு தெரிவாக உள்ள நிலையில், 18 புள்ளிகளுடன் சென்னை சுப்பர் கிங்ஸ், மற்றும் 16 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கெப்பிரல்ஸ் அணிகள் தகுதிகாண் சுற்றுக்கு தெரிவாகியுள்ளன.

இந்த நிலையில், நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம், கொல்கத்தா நைட்றைடர்ஸ் அணி, தகுதிகாண் சுற்றிற்கு தகுதிபெறுவதற்கான வாய்பை பெறவுள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட்றைடர்ஸ் அணிகள், தலா 12 புள்ளிகளைப் பெற்று ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் முறையே 4ஆம் மற்றும் 5ஆம் இடங்களில் உள்ளன.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், அதில் வெற்றிபெறும் அணி, புள்ளிகளின் அடிப்படையில் தகுதிகாண் சுற்றுக்கான தகுதியைப் பெறும் வாய்ப்பை பெறவுள்ளன.

இதேவேளை, ராஜஸ்தான் றோயல் 11 புள்ளிகளுடனும், கிங்ஸ்லெவன் பஞ்சாப் 10 புள்ளிகளுடனும், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் 9 புள்ளிகளுடனும், புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: