26 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி சொந்தவிடத்தில் ஆரம்பம்

Thursday, June 2nd, 2016

26 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, மற்றும் நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் என்பன தமது சொந்த இடத்தில் இன்று வியாழக்கிழமை(02-06-2016) முதல் இயங்க ஆரம்பித்துள்ளது.

இதுவரை காலமும் தற்காலிக இடத்தில் இயங்கிவந்த  இரு பாடசாலைகளிலும் கல்வி கற்ற 150 வரையான மாணவர்களும் சொந்த இடத்தில் தமது கற்றல் செயற்பாடுகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரம்பித்துள்ளனர். நடேஸ்வராக் கல்லூரியின் கட்டடங்கள் கடும் சேதமடைந்துள்ள காரணத்தால் நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயத்திலேயே  இரு பாடசாலைகளும் இயங்க ஆரம்பித்துள்ளன.

வடமாகாணக் கல்வியமைச்சர் த.குருகுலராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ. சரவணபவன் ஆகியோர்  கலந்து கொண்டு பாடசாலையைச் சம்பிரதாயபூர்வமாகத்  திறந்து வைத்துள்ளனர்.  இன்றைய நிகழ்வில் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா, கல்லூரியின் அதிபர் , மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts: