பாக்கு நிரிணைமுதல் மன்னார் வளைகுடா வரை கடற்றொழில் முகாமைத்துவம் வலுப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தோவனந்தா!

Tuesday, January 21st, 2020


எல்லைத் தாண்டியதும், அத்துமீறியதும், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான கடற்றொழிலை நாம் முற்றாக நிறுத்த வேண்டியத் தேவை இருக்கின்றது. இது, இன்றைய சந்ததியினருக்கு மட்டுமல்ல, நாளைய எமது சந்ததியினருக்கான இன்றைய எமது கட்டாயப் பொறுப்பாகும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்ள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்றில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் 9 ஒழுங்குவிதிகள் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இன்றும்கூட மேற்படி சட்டவிரோத முறையிலான கடற்றொழில் காரணமாக எமது கடல் வளம் அதிகளவில் அழிக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் தங்களது செலவுகளுக்கேற்ப அறுவடைகள் கிடைப்பதில்லை என்ற குறைபாட்டினை கடற்றொழிலாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் பாக்கு நீரிணை முதல், மன்னார் வளைகுடா வரையிலான கடற் பகுதியில் கடல் வளங்கள் தொடர்பில் இந்தியாவுடன் இணைந்து ஓர் ஆய்வினை நடத்துவதற்கும் நாம் எண்ணியுள்ளோம்.

இந்தியாவின் ஊநவெசயட ஆயசiநெ குiளாநசநைள சுநளநயசஉh ஐளெவவைரவநஇ இந்திய மத்திய அரசின் கடற்றொழில் திணைக்களம், தமிழ்நாட்டின் கடற்றொழில் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையின் நீரக வள மூலங்களுக்கான ஆய்வு நிறுவகமான Nயுசுயுஇ கடற்றொழில் திணைக்களம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏனைய பல்கலைக்கழகங்கள் என்பன கூட்டு இணைந்து மேற்படி ஆய்வினை முன்னெடுப்பது ஆரோக்கியமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

இந்த ஆய்வின் பின்னர் அதன் பெறுபேறுகளுக்கு அமைவாக பாக்கு நிரிணை முதற்கொண்டு மன்னார் வளைகுடா வரையிலான கடற் பகுதியில் கடற்றொழில் முகாமைத்துவமொன்றை வலுவுள்ளதாக முன்னெடுக்கும் திட்டம் குறித்தும் ஆலோசித்து வருகின்றோம்.

Related posts: