டக்ளஸ் எம்.பியின் சிறியதாயாரின் புகழுடல் நூற்றுக்கணக்கானவர்களின் அஞ்சலி மரியாதையுடன் தீயினில் சங்கமம்!

Friday, October 11th, 2019


ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது  சிறியதாயார் பிறைசூடி ஜெயதேவியின்  புகழுடல் நுற்றுக்கணக்கானவர்களது அஞ்சலி மரியாதையுடன் தீயினில் சங்கமமானது.

வயது முதிர்வு காரணமாக சிறிது காலம் உடல்நலக் குறைவுற்றிருந்த அன்னை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 09 ஆம் திகதி  தனது 85 ஆவது அகவையில் காலமானார்.

இந்நிலையில் 388/8 கோயில் வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இன்று காலை நடைபெற்ற இறுதிக்கிரியைகளை அடுத்து முற்பகல் 11. 30 மணியளவில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைய அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அன்னையின் புகழுடல் வைக்கப்பட்டது.

கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரனின் தலைமையில் நடைபெற்ற குறித்த அஞ்சலி மரியாதை நிகழ்வில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தோழர்கள் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி அன்னையின் புகழுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதை அடுத்து கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் இரா. செல்வவடிவேல் மற்றும் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் வை. தவநாதன் மற்றும் முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா கட்சியின் முக்கியஸ்தர் கோவை நந்தன் ஆகியோரது அஞ்சலி உரைகள் இடம்பெற்றன.

அதனைத்தொடர்ந்து ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி வழியாக அன்னையின் புகழுடல் ஓட்டுமடம் கோம்பயன் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அங்கு நடைபெற்ற கிரியைகளை அடுத்த பிற்பகல் 1.45 மணியளவில் அன்னையின் புகழுடல் தீயினில் சங்கமமானது.

அமரர் பிறைசூடி ஜெயதேவி அவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாநகர ஒருங்கிணைப்பாளரான நந்தனின் அவர்களின்  தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: