இ.போ.ச. போராட்டம்: வெறிச்சோடி கிடக்கும் யாழ்.மத்திய பேருந்து நிலையம்: பாடசாலை மாணவர்கள் பரிதவிப்பு!

Wednesday, September 18th, 2019


இலங்கை போக்குவரத்து சபை ஊழியா்கள் 3வது நாளாக பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து பணி புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக யாழ்.மத்திய பேருந்து நிலையம் வெறிச் சோடி காணப்படுகின்றது.

இந் நிலையில் வெளிமாவட்டங்களுக்கான பயணிகள், அரச ஊழியா்கள், பாடசாலை மாணவா்கள் பேருந்து சேவை இல்லாத நிலையில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர். அத்துடன் பருவகால சீட்டு பெற்று பாடசாலைக்கு மற்றும் தொழிலிடங்களுக்கு செல்லும் மாணவர்கள் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே குறித்த போக்கவரத்து சேவையின் பணிப்புறக்கணிப்பால் பேருந்து நிலையத்தில் பெருமளவு பயணிகள் செய்வதறியாது கொட்டும் மழைக்கு மத்தியில் நின்றதை அவதானிக்க முடிந்ததாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்

Related posts: