ஸ்டெல்லா புயலால் அமெரிக்காவிலி 7600 விமான சேவைகள் இரத்து!

Thursday, March 16th, 2017

அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்களை பனிப்புயல் ”ஸ்டெல்லா” தாக்கியதால், சுமார் 7600 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் வட கிழக்கு பகுதியான வாஷிங்டன் முதல் நியூ இங்கிலாந்து வரை கடந்த இரண்டு நாட்களாக பனிப்புயல் தாக்கி வருகிறது.

மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் இந்த பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7,600 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் பல அடிகளுக்கு பனி படர்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சாலைகள் மற்றும் சுரங்கப்பாதையில் படரும் பனிக்கட்டிகளை அகற்ற சிறப்பு வாகனங்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களின் இயல்பு வாழ்க்கையை பனிப்புயல் முற்றிலும் முடக்கியுள்ளது.இந்நிலையில், பனிப்புயல் மேலும் 24 மணி நேரம் தொடர வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts: