வெள்ளவத்தையில் மீண்டும் பொலிஸ் பதிவு!

Friday, April 26th, 2019

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து மீண்டும் பொலிஸ் பதிவுகளை பொலிஸார் அறிமுகம் செய்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு இருப்போரின் விபரங்களை பொலிஸார் கோரியுள்ளனர்.

வெள்ளவத்தையில் பொலிஸ் பதிவினை மேற்கொள்ளுமாறு பொலிஸார் படிவங்களை விநியோகித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலை அடுத்து பொலிஸ் பதிவு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் யுத்தம் நிலவி காலப்பகுதிகளில் கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொலிஸ் பதிவு நடைமுறையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: