வீணைச் சின்னத்திற்கு வாக்களிப்பது என்பது உங்கள் பிரதேச அபிவிருத்திக்கான வாக்கு – டக்ளஸ் தேவானந்தா எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, January 17th, 2018

வீணைச் சின்னத்திற்கு வாக்களிப்பது என்பது உங்கள் பிரதேச அபிவிருத்திக்கான வாக்கு என்பது மட்டமன்றி உங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் நிச்சயம் அமையும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடமராட்சிக்கு இன்றைதினம் விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா பருத்தித்துறை, சுப்பர்மடம், வதிரி, மானாங்கானை, பருத்தித்துறை இரண்டாம் ஒழுங்கை ஆகிய பகுதிகளுக்குச் சென்று சமகால அரசியல் நிலைமைகள் குறித்து அப்பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு  விளக்கமளித்துள்ளார்

இந்த சந்திப்புகளில் குறிப்பாக மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் மக்களின் தேவைகளை இனங்கண்டு முன்னுரிமை அடிப்படையில் தீர்த்துவைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா எமக்கு சாதகமான சூழல் ஒன்று உருவாகியுள்ள நிலையில் அதனை சாதகமாக்கி நீங்கள் சாதனை வெற்றியை நிலைநாட்டவேண்டியது  உங்களது கடமையாகும் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

தனியார் பேருந்து போக்குவரத்து சேவை தொடர்பில் அரசு கொண்டிருக்கும் மாற்றாந்தாய் மனப்பான்மை நிலை மாறவேண...
உயர் மட்டம் கவனம் எடுத்திருந்தால் தமிழர்களின் பிரச்சனைகள் எப்போதோ தீர்ந்திருக்கும் – நாடாளுமன்றில் ட...
வடக்கு கிழக்கு கடற்றொழில்சார் அபிவிருத்திக்கு உதவ வேண்டும். - நோர்வேயிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...