விவசாயிகளுக்கு இந்தியாவில் பயிற்சி!

Friday, November 3rd, 2017

வடக்கு மாகாணத்தில் உள்ள விவசாயப் போதனாசிரியர், மற்றும் விவசாயிகளை இந்தியாவிற்கு பயிற்சி நெறிக்காக அழைத்துச் செல்லும் செயல் திட்டத்தை தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் செயல்படுத்த தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஈ.சுரேந்திரநாதன் தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது;

வடக்கு மாகாணத்தில் விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சு பல செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. இவற்றில் பிரதானமான விடயமாக புதிய கருவிகளைக் கொண்டு விவசாயத்தினை எளிமையாக மேற்கொள்ளும் செயல்பாடுகளை எவ்வாறு ஊக்குவிக்க முடியும் என்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். இதற்கான பயிற்சி நெறிகள் 161 விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளிலும் மற்றும் 5 மாவட்டவிவசாயப் பயிற்சி நிலையங்களின் ஊடாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. புதிய விவசாய உபகரணங்கள் அறிமுகம் செய்யப்படும் போது அவை தொடர்பான முழு விளக்கம் பெறுவது மிக அவசியம்.

ஆகவே இதனை அடிப்படையாகக் கொண்டு இது தொடர்பான பயிற்சிகளை பெறுவதற்கும் களங்களை நேரில் சென்று பார்வையிடுவதற்குமுரிய ஓர் ஏற்பாடாக வடக்கு மாகாணத்தில் உள்ள விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் விவசாயிகளை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று பயிற்சிகளை வழங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. இது நடப்பு ஆண்டுடன் நிறைவு பெறாமல் இனிவரும் ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Related posts: